முல்லைப்பெரியாற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா
ADDED :1778 days ago
சின்னமனுார் : சின்னமனுார் ஐயப்பா சேவா சங்கம், ஐயப்ப பக்த பஜனை சபை சார்பில் முல்லைப்பெரியாற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடந்தது. லட்சுமிநாராயணாபெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி நெல்லி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின் அன்னதானம் நடந்தது.ஐயப்பா சேவா சங்க தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராஜன், சங்க நிர்வாகிகள், பஜனை குழுவினர் பங்கேற்றனர். முன்னதாக ஐயப்பன் கோயிலில் சிறப்பு பூஜைகள், அபி ேஷக ஆராதனைகள் நடந்தது. மாலையணிந்துள்ள பக்தர்கள் பங்கேற்றனர்.