இருமுடி கட்டி வந்த பெண்கள்
ADDED :1783 days ago
திருமங்கலம் : வாடிப்பட்டியில் மாலை அணிந்து விரதமிருந்த 60 வயதிற்கு மேற்பட்ட 100 பெண்கள் கொரோனா கட்டுப்பாடுகளால் சபரிமலை செல்ல முடியவில்லை. இதனால் நேற்று அண்ணாமலையார் கோயிலில் இருமுடிகட்டி கிளம்பியவர்கள், திருமங்கலம் துளசிமணி ஐயப்பன் கோயிலுக்கு நடந்தே வந்தனர்.அவர்களை அறங்காவலர் சுகுமாறன் கும்ப மரியாதையுடன் வரவேற்றார். பக்தர்கள் இருமுடி காணிக்கை செலுத்தி, ஐயப்பனை தரிசித்தனர்.