உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலுார்பேட்டையில் திருவாசகம் முற்றோதல்

அவலுார்பேட்டையில் திருவாசகம் முற்றோதல்

 அவலுார்பேட்டை; அவலுார்பேட்டை அகத்தீஸ்வரர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.மேல்மலையனுார் வட்டம் அவலுார்பேட்டையில் அகத்தீஸ்வரர் கோவிலில் உலக நன்மைக்காக திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.திருவாசகம், சிவபுராணம், 51 தலைப்புகளில் இசையுடன் பாடினர்.இதில் சிவனடியார்கள், அவலுார்பேட்டை தமிழ் சங்கத்தினர், வள்ளலார் மன்றத்தினர், மரம் நடுவோர் மற்றும் இயற்கை விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !