இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சங்காபிஷேகம்
                              ADDED :1781 days ago 
                            
                          
                           மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் இந்த ஆண்டின் நிறைவு சோமவார 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
மதுரை மேலமாசிவீதியில்  சிவகங்கை சமஸ்தானத்திற்குட்பட்ட இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் அமைந்துள்ளது, இத்தலத்தில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 108 வலம்புரிசங்குகளை சிவலிங்கம் வடிவில் அமைத்து, அதற்கு சிறப்பு பூஜை செய்து, ஸ்தல தலைமை அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் சிவபெருமானுக்கு  சிறப்பான முறையில் சங்காபிஷேகம் நடந்தது. விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், நாடு நலம் பெறவும், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.