மார்கழி உற்சவம்: பஜனையோடு பக்தர்கள் உற்சாகம்
ADDED :1770 days ago
உடுமலை : கோவில்களில், அதிகாலையில் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாராயண பஜனையோடு, வாசலில், பூக்கோலமிட்டு, மார்கழி மாத பிறப்பை உற்சாகத்துடன் உடுமலைப் பகுதி மக்கள் வரவேற்றனர். தனுர் மாதம் எனப்படும் மார்கழி மாதம் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியதாகும்.
இம்மாதத்தின் அதிகாலை பொழுதில், கோவில்களில் வழிபாடு நடத்துவது பல்வேறு நன்மைகளை தரும்.உடுமலை பகுதியில், மார்கழி மாத துவக்கத்தை வழக்கமான உற்சாகத்தோடு மக்கள் வரவேற்றனர். உடுமலை சீனிவாச பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவைசாதித்தார். கோவில் பிரகாரத்தில் பஜனை பாடி பகவத கோஷ்டியினர் வலம் வந்தனர்.