நடந்தது நன்மைக்கே!
ADDED :1792 days ago
கழுதை ஒன்றை செல்லமாக வளர்த்தார் முல்லா. அது ஒருநாள் காணாமல் போனது. இந்த தகவலை அறிந்த முல்லா ஊராரிடம், ‘‘அப்பாடா… நடந்தது நன்மைக்கே’’ என்றார்.
‘‘கழுதை காணாமல் போனதை நன்மை என்கிறீர்களே?’’ எனக் கேட்டனர்.
‘‘கழுதை மீது சவாரி போயிருந்தால் நானும் அல்லவா காணாமல் போயிருப்பேன்’’ என்று சிரித்தார் முல்லா.