கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பணமே வாழ்க்கை என்கிறீர்களா
பணத்தாசை சகல தீமைகளுக்கும் ஆணிவேர் என்கிறது பைபிள். சிரிப்புக்கும், கூத்துக்கும், கேளிக்கைக்கும் பணக்காரர்கள் விருந்து நடத்துகிறார்கள். அதில் பரிமாறப்படும் திராட்சை பானம் போதையை தருகிறது. ஏதோ ஒரு பலன் கருதி நடத்தப்படும் அந்த விருந்தில் பேசித் தீர்க்கப்படும் பிரச்னைகளில் பணம் கைமாறுகிறது.எவ்வளவு கடினமான விஷயத்துக்கும் பணம் பதில் சொல்லி விடுகிறது.ஆனால் ஒன்றை மட்டும் பணத்தால் வாங்க முடியாது. அது ஆண்டவரின் கருணை. “கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்க நினைத்தால் உன்னுடைய பணம் உன்னுடன் அழிந்து போகும்,” என்கிறது பைபிள். அது மட்டுமல்ல! பணத்தால் சாதிக்கப்படும் செயல்கள் துன்பத்தை விளைவிக்கும்.பைபிள் சொல்வதைக் கேளுங்கள்.* பணக்காரர்களே! உங்களுக்கு வரப்போகும் துயரங்களுக்காக இப்பொழுதே அழுது ஊளையிடுங்கள்.* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத்துாண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும், புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அது அவர்களை நாசத்திலும், நரகத்தின் அக்னியிலும் மூழ்கடிக்கிறது.* ஊசியின் காதில் ஒட்டகம் கூட நுழைந்து விடும். ஆனால் பணமுள்ளவன் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது.