உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட அனுமதி

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் நீராட அனுமதி

தூத்துக்குடி: அறுபடை வீடுகளுள் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில், கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக,கடந்த ஏழு மாதமாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. தற்போது, அரசின் வழிட்டுதலின்படி கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடற்கரையில் புனித நீராடுவதற்கும், மொட்டை போடுதல், காது குத்துதல் உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. கோவிலில் முக்கிய திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் இன்று முதல் திருச்செந்தூர் கோவில் வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதற்கு அனுமதி அளித்து மாவட்ட நிர்வாகம் அளித்து உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் கோவிலில் மொட்டை போடுதல், காது குத்தல், வள்ளி குகைக்கு செல்லுதல் உள்ளிட்டவைகளுக்கு விதித்த தடை இன்னும் நீக்கப்படவில்லை. இன்று மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை தொடர்ந்து பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !