மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
1725 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
1725 days ago
விழுப்புரம்: மேல்மருவத்துாருக்கு, விழுப்புரம் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் பக்தர்கள் இருமுடி ஏந்தி சென்றனர். விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மேல்மருவத்துார் ஆதிபரா சக்தி ஆன்மீக இயக்கம் சார்பில் கடந்த 11ம் தேதி முதல் சக்தி மாலை அணிந்து, இருமுடி ஏந்தி ஏழு நாட்கள் விரதம் இருந்தனர். இதை தொடர்ந்து, மே ல்மருவத்துார் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு அபிேஷகம் செய்வதற்காக , விழுப்புரம் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருந்து நேற்று 500 பக்தர்கள் புறப்பட்டனர். ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமையில், பக்தர்கள் இருமுடி ஏந்தி புறப்பட்டனர். முன்னதாக, ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. அப்போது, ஆன்மீக இயக்க மாவட்ட துணை தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரத்தினசிகாமணி மற்றும் நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, சண்முகம், வசுந்தராதேவி, மகாலிங்கம், மணிகண்டன், மோகனகிருஷ்ணன், பழனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
1725 days ago
1725 days ago