ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவம்
ADDED :1831 days ago
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பகல் பத்து உற்ஸவத்தின் ஆறாம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை 11:00 மணிக்கு கோயிலிலிருந்து புறபட்டு வடபத்ரசயனர் சன்னிதியிலுள்ள கோபால விலாச மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி மற்றும் 12 ஆழ்வார்களுக்கு சிறப்பு பூஜைகளும், அரையர்வியாக்யனம், கோஷ்டி, தீர்த்தம், சடாரி ஆசீர்வாதம் நடந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்தனர்.