உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவ பெருமாள் கோவிலில் 25ல் பரமபத வாசல் திறப்பு

வீரராகவ பெருமாள் கோவிலில் 25ல் பரமபத வாசல் திறப்பு

 திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில், 25ல் பரமபத வாசல் திறப்பு விழா நடக்கிறது. அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீதேவி, பூமிநீளா தேவி சமதே வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும். தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன், ஸ்ரீவீரராகவ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளுகிறார்.


அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்துடன், சொர்க்கவாசல் வழியாக பிரவேசித்து, ராஜகோபுர வாசல் வழியாக கோவிலுக்குள், பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். காலை, 6:30 மணி முதல், பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர்.ஆருத்ரா தரிசன விழாதிருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், வரும், 30ம் தேதி, ஆருத்ரா தரிசன விழா நடக்கிறது. அன்று அதிகாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிேஷகத்துக்கு பின், சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பர், கனகசபை மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். செயல் அலுவலர் சீனிவாசன் கூறுகையில், ஆருத்ரா தரிசனம், பரமபத வாசல் திறப்பு, வழக்கம் போல் நடக்கும். திருவீதியுலா இருக்காது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, சுவாமி தரிசனம் செய்யலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !