சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமி விஜய யாத்திரைமலர் வெளியீடு!
மதுரை: மதுரை பை பாஸ் சிருங்கேரி சங்கர மடத்தில் நேற்று மாலை சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமி விஜய யாத்திரை மலரை வெளியிட்டு, பக்தர்களுக்கு ஆசிவழங்கினார். சிருங்கேரி மடத்தின் 25வது குரு சச்சிதானந்த பாரதி சுவாமி எழுதிய மீனாட்சிசதகம், பாரதீதீர்த்த சுவாமி விஜயயாத்திரை மலர் ஆகிய நூல்களை சிருங்கேரி சுவாமி வெளியிட்டார். இதன் முதல் பிரதிகளை பேராசிரியர் அனந்தராமன், ராமசுப்பிரமணிய ராஜா பெற்றுக்கொண்டனர். குருசேவையில் ஈடுபட்டவர்களை நிர்வாக அதிகாரி கவுரிசங்கர் கவுரவித்தார். இன்று காலை 9 மணிக்கு அம்மன்சந்நிதி தெருவில் உள்ள மடத்தில் சிருங்கேரிசுவாமி, மூர்த்திகளை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகத்தை நடத்துகிறார். 11 மணிக்கு பக்தர்களுக்கு தரிசனம் அளித்து தீர்த்த பிரசாதம் வழங்குகிறார். மாலை 6 மணிக்கு அருளுரை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு சந்திரமவுலீஸ்வர பூஜையை நடத்துகிறார். நாளை(மே31) காலை 7.30 மணிக்கு மீனாட்சியம்மன் கோவில் கல்யாண மண்டபத்தில் சந்திரமவுலீஸ்வர பூஜை நடக்கிறது. 10 மணிக்கு சிருங்கேரி சுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார். மாலை 4 மணிக்கு தேனி புறப்படுகிறார்.