உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை சிவன் கோயிலில் வைகாசி தேரோட்ட விழா கோலாகலம்

நெல்லை சிவன் கோயிலில் வைகாசி தேரோட்ட விழா கோலாகலம்

திருநெல்வேலி : நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் சவுந்திரவல்லி அம்பாள் சமேத கைலாசநாதர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. நெல்லை ஜங்ஷன் கைலாசநாதர் (சிவன்) கோயிலில் திருக்கொடி ஏற்றம் நடந்தது. தொடர்ந்து தினமும், காலையிலும், மாலையிலும் ஒவ்வொரு வாகனத்திலும் சுவாமி பவனி நடந்தது. 8ம் நாளான நேற்று முன்தினம் பச்சை சாத்தி செப்பு சப்பரம், பூங்கோயில் சப்பரம், மாலையில் பாரிவேட்டை வெட்டுங்குதிரை, கங்காளநாதர் செப்பு சப்பரம், இரவு தேர் கடாட்சம் வெட்டுங்குதிரை பவனி நடந்தது. 9ம் நாளான நேற்று காலையில் திருத்தேருக்கு சுவாமி அம்பாள் எழுந்தருளலும், திருத்தேர் வடம் பிடித்தலும் நடந்தது. 10ம் நாளான இன்று (30ம் தேதி) வெள்ளி இடபம் தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அய்யர் சிவமணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !