நிர்ஜலா ஏகாதசி
ADDED :1793 days ago
வியாசர் தர்மரிடம் ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். அங்கிருந்த பீமன், தானும் விரதமிருக்க ஆவல் கொண்டான். ஆனால், அவனால் பசி தாங்க முடியாது. அதிகமாக சாப்பிடுவது அவனது வழக்கம். வியாசரிடம், ஆண்டுக்கு ஒருமுறையாவது ஏகாதசி விரதமிருக்க வழிகாட்டும்படி வேண்டினான். ஆனி வளர்பிறை ஏகாதசியில் நீர் அருந்தாமல் விரதமிருந்தால், சகல ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் கிடைக்கும், என்றார் அவர். பீமனும் விரதமிருந்து பலனும் பெற்றான். ஆனியில் வரும் ஏகாதசியை நிர்ஜலா ஏகாதசி, பீம ஏகாதசி என்பர்.