ஐயப்பா சேவா சங்கம் சார்பில் மஹா சண்டி ஹோமம்
ADDED :1829 days ago
கரூர்: கல்யாண பசுபதீஸ்வரா ஐயப்ப சேவா சங்க, 34வது ஆண்டு விழாவையொட்டி, ஐயப்பன் கோவில் முன்பு, மஹா சண்டி ?ஹாமம் நேற்று நடந்தது. நேற்று முன்தினம், மஹா சங்கல்பத்துடன், விழா துவங்கியது. 64 யோகினி பலி, 64 பைரவர் பலி ஆகிய, நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 7:00 மணிக்கு கணபதி பூஜையுடன் மஹா சண்டி ?ஹாமம் நிகழ்ச்சிகள் துவங்கி மதியம், 2:00 மணி வரை நடந்தது. அதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பிறகு, மஹா தீபாராதனைக்கு பிறகு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, ஐயப்பா சேவா சங்கத்தினர் செய்து இருந்தனர்.