சாணார்பட்டி ஐயப்பன் மண்டல பூஜை
ADDED :1779 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி ஐயப்பன் கோயிலில் மகரவிளக்கு மண்டல பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், நெய், தேன், சந்தனம், இளநீர், பன்னீர், தயிர், புஷ்பம், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாரதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து அன்னதானம் நடந்தது. ராமராசு, பொன்கருணாகரன், ஜெய்சிங், பாண்டி உள்ளிட்ட விழாக்குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.