ராமானுஜ பஜனை மடத்தில் பஜனை ஊர்வலம்
ADDED :1779 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனை மடத்தில், மார்கழி மாத பஜனை ஊர்வலம் நடந்தது.
முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடத்தில், மார்கழி மாத மகோற்சவம் கடந்த 16ம் தேதி, பஜனை ஊர்வலத்துடன் துவங்கியது. 19ம் தேதி பஜனை ஊர்வலமும், நேற்று முன்தினம் வைகுண்ட ஏகாதசி, பஜனை ஊர்வலம் நடந்தது.மார்கழி மாத 2வது சனிக்கிழமையான நேற்று பஜனை ஊர்வலம் நடந்தது. வரும் ஜனவரி 10ம் தேதி, மாப்பிள்ளை அழைப்பும், 11ம் தேதி ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம், 12ம் தேதி ஊஞ்சல் உற்சவம் மற்றும் அனுமந் ஜெயந்தி விழா நடக்கிறது.