ஆண்டின் கடைசி பிரதோஷம்: தஞ்சை பெரியகோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :1765 days ago
தஞ்சாவூர்: 2020ம் ஆண்டின் கடைசி பிரதோஷமான இன்று, தஞ்சை பெரியகோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரினசம் செய்தனர்.
சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு தனி சிறப்பு பெற்றது. அத்தகையை சிறப்பு மிக்க பிரதோஷமான இன்று 2020 ஆண்டின் கடைசி பிரதோஷம் என்பதால், தஞ்சை பெரியகோவிலில், மாலை 4.45 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு நந்தியம் பொருமனை தரிசனம் செய்தனர். தெர்மல் மீட்டர் கொண்டு பக்தர்களை சோதனை செய்த பிறகே, கோவிலுக்குள்ளாக அனுமதிக்கப்பட்டனர்.