வேண்டாமே பொறாமை
ADDED :1789 days ago
* பொறாமையை தவிருங்கள். அது நன்மையை விழுங்கி விடும்.
* நேர்மையுடன் வாழ்பவன் பயப்படவோ, துன்பப்படவோ மாட்டான்.
* வந்து செல்லும் பயணிகளைப் போல உலகில் வாழுங்கள்.
* கோபம் எழுந்தால் மவுனமாக இருங்கள்.
* உள்ளத்தை உறுத்தும் இழிசெயல்களை செய்யாதீர்கள்.
* தர்மம் செய்பவனுக்கு இறையருளால் செல்வம் குறையாது.
* மனத்துாய்மை இறை நம்பிக்கையின் ஓர் அங்கம்.
* கருணை இல்லாதவன் மீது இறைவன் கருணை காட்டுவதில்லை.
* தானியத்தை பதுக்குபவன் தண்டனைக்குரிய குற்றவாளி.
* நல்லெண்ணத்தால் இறைவழிபாடு முழுமை பெறும்.
* தேவையானதை மட்டும் உண்ணுங்கள்; எதையும் வீணாக்காதீர்கள்.