உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி பகுதியில் சனிப் பெயர்ச்சி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி பகுதியில் சனிப் பெயர்ச்சி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதி சிவன் கோவில்களில் சனி பெயர்ச்சி நிகழ்ச்சி நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில், சனிப்பெயர்ச்சியையொட்டி இரண்டு நாட்கள் கும்ப கலச பூஜைகள், யாகம் நடந்தது. நேற்று அதிகாலை சிறப்பு அபிேஷகங்கள், கலசாபிேஷகம் செய்து வைக்கப்பட்டுசிறப்பு அலங்காரம் செய்தனர். தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சனிபகவான் யெர்ச்சி நிகழ்வு நேற்று அதிகாலை 5:22 மணிக்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பரிகாரம் செய்யப்பட வேண்டிய ராசிகள், நட்சத்திரங்களுக்கு பூஜைகள் செய்து வைக்கப்பட்டது.அம்பிகேஸ்வர குருக்கள் தலைமையிலான குழுவினர் சிறப்பு பூஜைகளை செய்தனர்.

சங்கராபுரம்சங்கராபுரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள சனி பகவானுக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.இதே போல் சங்கராபுரம் வட்டம் முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனி பகவான், பாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள சனி பகவானுக்கு சனி பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

திருக்கோவிலூர்திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், சனி பெயர்ச்சியை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை நடந்தது. காலை 5:22 மணிக்கு சனி பகவானுக்கு கலச அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமியை வழிபாடு செய்தனர்.ரிஷிவந்தியம்ரிஷிவந்தியம் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், சனி பகவானுக்கென தனி சன்னதி உள்ளது.

திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலை போன்று இருப்பது இக்கோவிலின் தனி சிறப்பாகும். சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரராசிக்கு நேற்று அதிகாலை இடம் பெயர்ந்தார்.இதையொட்டி சிறப்பு பூஜை நேற்று நடந்தது. குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !