உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்

மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள்

 திருமங்கலம் : திருமங்கலம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சனிப்பெயர்ச்சி விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.யோக சனீஸ்வரருக்கு மகா சனீஸ்வர ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம்  நடந்தது.

சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாக  அலுவலர் சக்கரையம்மாள் செய்தார். பூஜைகளை அர்ச்சகர் சங்கர நாராயணபட்டர் செய்தார்.

திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானுக்கு  சிறப்பு பூஜை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருளியுள்ள சனீஸ்வரபகவானுக்கு நேற்று அதிகாலை 3:30 மணியிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கியது. காலை 5:20  பூஜைகள் முடிந்து தீபாராதனை நடந்தது.அவனியாபுரம்: வலையங்குளம் தனிலிங்க பெருமாள் கோயிலில் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள சனீஸ்வர பகவானுக்கு கிராம மக்கள் சார்பில் சிறப்பு பூஜை  நடந்தது. பாலமீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயிலில் நவக்கிரகங்களுடன் எழுந்தருயுள்ள சனீஸ்வர பகவானுக்கு யாகசாலை பூஜை நடந்தது.

சோழவந்தான்: சோழவந்தான் சுயம்பு சனீஸ்வர  பகவான் கோயிலில் நடந்த சனி பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.நேற்று அதிகாலை 3:00 மணிக்கு வரதராஜ பண்டிட் தலைமமையில் சிவாச்சார்யார்கள் வேதமந்திரங்கள் முழங்க  புனிதநீர் நிரப்பிய குடங்கள் யாகசாலையில் வைத்து கணபதி ஹோமம், அர்ச்சனை நடந்தன. அனைத்து ராசிகாரர்கள், 27 நட்சத்திரங்களுக்கு சாந்தி தோஷ பரிகார பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன.  வெள்ளி கவசத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை தக்கார் இளஞ்செழியன் மற்றும் பணியாளர்கள் செய்தனர்.அலங்காநல்லுா தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சிறப்பு யாக சாலை  பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகி சீனிவாசன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !