உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

 பழநி : பழநி முருகன் கோயிலில் தொடர் விடுமுறை, சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.பழநி முருகன் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் அதிகம் வந்த வண்ணம்  உள்ளனர். தொடர் விடுமுறையால் நேற்று வெளியூர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோயிலில் குடமுழுக்கு மண்டபம் வழியே பொது தரிசனத்தில் காத்திருந்து முருகரை  தரிசனம் செய்தனர். அடிவாரம் சுற்றியுள்ள பகுதியில் வாகனங்கள் அதிகமாக நிறுத்தப் பட்டிருந்தது. கொரோனா விதிமுறைகளை பக்தர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனை அதிகாரிகளும் கண்டு  கொள்ளவில்லை. அடிவாரம் கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் தொற்று பயமின்றி அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்காமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !