உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாண உற்சவம்

ஆண்டாள் நாச்சியாருக்கு திருக்கல்யாண உற்சவம்

 உடுமலை: குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியாார் கோவிலில் திருப்பாவை நோன்பின் கூடாரவல்லி உற்சவம் ஜன., 10ம் தேதி நடக்கிறது.மார்கழி திங்கள் மதி நிறைந்த நாளில், திருப்பாவை நோன்பு துவங்கி,  மாதம் முழுவதும், பாசுரம் பாடி, பெருமாள் கோவில்களில், சிறப்பு உற்சவம் நடக்கிறது. ஆண்டாள், அருளிய திருப்பாவையில், 27 பாசுர சேவையாக கூடார வல்லி உற்சவம் ஜன., 10ம் தேதி  நடக்கிறது.பெருமாளை மணம் முடிக்க, நோன்பிருக்கும் ஆண்டாளின் ஒரு சேவையாக, இந்நாளில், பெருமாளுக்கு, சக்கரை பொங்கல் படைத்து சிறப்பு வழிபாடு நடக்கிறது. குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார்  கோவிலில், கூடாரவல்லி உற்சவம், சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வையொட்டி, ஆண்டாள் நாச்சியார் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம், ஜன., 11ம்தேதி நடக்கிறது. ஜன.,  10ம்தேதி பூமிலட்சுமி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷக அலங்காரம், காலையிலும், மாலையில் சுவாமிகளுக்கு திருக்கல்யாண நிச்சயதார்த்தம் நடக்கிறது.மறுநாள் காலை, 7:00 மணிக்கு கோ பூஜை,  தொடர்ந்து, பாராயண சேவை நடக்கிறது. காலை, 12:00 மணிக்கு ஆண்டாள் நாச்சியார், ரங்கமன்னார் சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !