உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 2021ல் 4 கிரகணங்கள்; இந்தியாவில் 2 கிரகணங்கள் மட்டுமே பார்க்க முடியும்

2021ல் 4 கிரகணங்கள்; இந்தியாவில் 2 கிரகணங்கள் மட்டுமே பார்க்க முடியும்

புதுடில்லி: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழ இருப்பதாக மத்தியப் பிரதேச வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா தெரிவித்துள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம், உஜ்ஜையினியில் உள்ள வானிலை ஆய்வாளரான ராஜேந்திர பிரகாஷ் குப்தா கூறியதாவது: 2021ம் ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில், ஒரு பூரண சூரிய கிரகணமும், ஒரு பூரண சந்திர கிரகணமும் வரும். மே 26ம் தேதி பூரண சந்திர கிரகணம் நிகழும். இது மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை மற்றும் சில வடகிழக்கு மாநிலங்களில் தெரியும். நவம்பர் 19ம் தேதி நிகழும் சந்திர கிரகணம் அருணாச்சல பிரதேசம், அசாமின் சில பகுதிகளில் தெரியும். ஜூன் மாதம் 10ம் தேதி வருடாந்திர சூரிய கிரகணம் நிகழும். இது 94.3 சதவீதம் சூரியனை மூடி, நெருப்பு வளையமாக காணப்படும். ஆனால் இந்தியாவில் இதை பார்க்க முடியாது. அதேபோல் டிசம்பர் 4ம் தேதி நிகழும் பூரண சூரிய கிரகணத்தில், சந்திரனின் 97.9 சதவீதம், பூமியின் நிழலால் மூடப்பட்டிருக்கும். இதுவும் இந்தியாவில் தெரியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !