வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்
ADDED :1750 days ago
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், திருவாதிரை திருக்கல்யாண வைபவம் விழா, நாளை நடைபெறுகிறது. மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில், மனோன்மணி அம்மன் உடனமர் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு நாளை (30 ஆம் தேதி) காலை, 9:00 லிருந்து, 11:00 மணிக்குள் மனோன்மணி அம்மனுக்கும், வெள்ளிங்கிரி ஆண்டவருக்கும், திருவாதிரை திருக்கல்யாண வைபவம் விழா நடைபெறுகிறது. இவ்விழா ஏற்பாடுகளை, வெள்ளிங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.