ஆருத்ரா தரிசனம் பக்தர்களுக்கு தடை
ADDED :1750 days ago
வடமதுரை : வடமதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தின் போது பக்தர்கள் கூட்டமாக குவிய தடை விதித்துள்ளனர்.இங்கு நடராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம், அபிஷேகம் செய்து நாளை (டிச.30) காலை 5:00 முதல் 6:00 மணிக்குள் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, ஆருத்ரா தரிசனத்தின் போது ஒரே நேரத்தில் பக்தர்கள் கூட்டமாக சேர கூடாது. முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்யலாம் என, செயல் அலுவலர் மாலதி தெரிவித்தார்.