ராமநாதபுரம் சொக்கநாத சுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம்
ADDED :1843 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சி சமேத சொக்க நாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனம் கோலாகலமாக நடந்தது.
ராமநாதபுரம் தேவஸ்தானம் மீனாட்சி சமேத சொக்கநாதசுவாமி கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, நேற்று அபிஷேகங்கள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, நடராஜர் சன்னிதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இன்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடந்தது. கோயில் வளாகத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.