மார்கழி சொற்பொழிவு இன்று ஆரம்பம்
ADDED :1746 days ago
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம் பாவடி, கம்பன் கழகம் சார்பில், மார்கழி முழுதும், சொற்பொழிவாளர் பேசுவர். நடப்பாண்டு கொரோனாவால், ஒரு மாத மார்கழி பெருவிழாவை, இன்று முதல், வரும் ஜன., 3 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலநத்தம் செங்குந்தர் திருமண மண்டபத்தில், தினமும் இரவு, 7:00 முதல், 9:00 மணி வரை, சொற்பொழிவு நடக்கும். இன்று, ஆட்டையாம்பட்டி பேராசிரியை சத்யா, இலக்கியங்களில் பாத்திரங்கள் தலைப்பில் பேசுகிறார். நாளை, சேலம் பேராசிரியை அருள்செல்வி, அன்பில் சிறந்த தவமில்லை தலைப்பில் பேச உள்ளார். 2021 ஜன., 1ல், சேலம் பேராசிரியர் சங்கரராமன், இதிகாசங்கள் காட்டும் வாழ்வியல் தலைப்பிலும், 2ல், சேலம் செங்குட்டுவன், பேசுவதால் பயன் இல்லை தலைப்பிலும், ஜன., 3ல், மயிலாடுதுறை பேராசிரியை முத்துலட்சுமி, திருவாசகம் தலைப்பில் பேச உள்ளனர்.