உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா விழாவையொட்டி திருக்கல்யாணம்

கைலாசநாதர் கோவிலில் ஆருத்ரா விழாவையொட்டி திருக்கல்யாணம்

ஆத்தூர்: ஆத்தூர், கைலாசநாதர் கோவிலில், நேற்று இரவு, 7:00 மணிக்கு, ஆருத்ரா உற்சவ திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதில், மனோன்மணி அம்பிகை சமேத சந்திரசேகர சுவாமிக்கு கல்யாணம் நடந்தது.


தொடர்ந்து, 108 லிட்டர் பால், சந்தனம், கதம்ப பொடி, விபூதி, நெய், தயிர் உள்பட, 16 வகை அபி ?ஷக பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் வழிபட்டனர். இன்று காலை, 7:00 மணிக்கு, அலங்கார நடன கோலத்தில் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜர் சுவாமி, கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு திருவீதி உலா செல்கிறார். அதேபோல், ஆத்தூர், கோட்டை காயநிர்மலேஸ்வரர், தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர், வீரகனூர் கங்காசவுந்தரேஸ்வரர், பேளூர் தான்தோன்றீஸ்வரர், வெள்ளை விநாயகர் கோவில் மகாலிங்கேஸ்வரர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், ஆருத்ரா உற்சவ விழா நடந்தது. மேலும், ஆருத்ரா விழாவையொட்டி, ஆத்தூர் கைலாசநாதர் உள்ளிட்ட சிவன் கோவில்களில், நடனப்பள்ளி மாணவியரின் பரத நாட்டியம், சிவதாண்டவ நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !