நெல்லையப்பர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் உற்சாகம்
ADDED :1741 days ago
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் தாமிரசபையில் நடராஜர் திருநடன ஆருத்ரா தரிசனம் நடந்தது.
கோயிலில் திருவாதிரை திருவிழா டிச.,21ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிச.,24ல் சுவாமி-அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா நடைபெற்றது.விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள தாமிரசபையில் நடராஜ பெருமானுக்கு திருநீராட்டு, சிறப்பு தீபாராதனை இரவு முழுவதும் நடைபெற்றது. நேற்று அதிகாலையில் நடராஜர் திருநடன ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருநெல்வேலியை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோயிலிலும் நேற்று ஆருத்ரா தரிசனம் நடந்தது.