மூலநாதர் கோவிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு
ADDED :1742 days ago
பாகூர்; பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன வழிபாடு நேற்று நடந்தது.பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, ஆருத்ரா தரிசன வழிபாடு நேற்று நடந்தது. இதனையொட்டி, அதிகாலை 3.00 மணிக்கு, மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் வாசிக்கப்பட்டு, திருப்பள்ளி எழுச்சி நடந்தது. 3.30 மணிக்கு விநாயகர், மூலநாதர், வேதாம்பிகையம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 5.00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத மாணிக்க நடராஜர் பெருமானுக்கு, பால், தயிர்,தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 6.00 மணிக்கு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, ஆருத்ரா தரிசனம் நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.