குன்றத்தில் புத்தாண்டு வழிபாடு: வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலிப்பு
ADDED :1738 days ago
திருப்பரங்குன்றம் : ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று (ஜன.,1) திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு வெள்ளி கவசங்கள் சாத்துப்படியாகியது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் மூலவர்கள் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, குருவாயூரப்பன், சிவபெருமான், தட்சிணாமூர்த்திக்கு வெள்ளிக் கசவம் சாத்துப்படியாகி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் மூலவருக்கு வெள்ளிக் கவசம், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு அலங்காரம் நடக்கிறது.