உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலூர்:  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

திருக்கோவிலூர், உலகளந்த பெருமாள் கோவிலில், ஆங்கில வருடப் பிறப்பு மற்றும் பகல் பத்து உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சியாக அதிகாலை 4:00 மணிக்கு மூலவர் பெருமாள் விஸ்வரூப தரிசனம், 5:00 மணிக்கு நித்யபடி பூஜைகள், 6:30 மணிக்கு தேகளீசபெருமாள், புஷ்பவல்லிதாயார் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி, கண்ணாடி அறையில் எழுந்தருளி விசேஷ திருமஞ்சனம் நடந்தது. பகல் 11:30 மணிக்கு சாற்றுமறை, மகா தீபாராதனை நடந்தது. அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில், பல மணி நேரம் காத்திருந்து, சுவாமி தரிசனம் செய்தனர். ஜீயர் ஸ்ரீனிவாசராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் மூலமூர்த்திக்கு அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கீழையூர், மகாமாரியம்மன் கோவிலில் இரவு 12:00 மணிக்கு அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பிரசாத விநியோகம் நடந்தது. இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !