பூவராக சாமி கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசனம்
ADDED :1739 days ago
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசாமி கோவிலில் புத்தாண்டு தினத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.அதனையொட்டி, மூலவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும் தொடர்ந்து அம்புஜவல்லி தாயார், உற்சவமூர்த்தி யக்ஞவராகன், ஸ்ரீதேவி, பூதேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்து கிருமி நாசினி மூலம் கைகள் சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.