உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திட்டக்குடி அறிவு திருக்கோயிலில் உலக அமைதி தினம்

திட்டக்குடி அறிவு திருக்கோயிலில் உலக அமைதி தினம்

 திட்டக்குடி: திட்டக்குடி அறிவு திருக்கோயிலில் மனவளக்கலை மன்றம் சார்பில் உலக அமைதி தின வேள்வி நடந்தது.

நிகழ்ச்சிக்கு மனவளக்கலை விழுப்புரம் மண்டல துணைத்தலைவர் பேராசிரியர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் பாண்டியன், பாஸ்கரன், ராஜரத்தினம், அருந்ததி, கிரிஜா, வைஷ்ணவிதேவி, சங்கீத பிரியா, பிச்சையம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர். இதில் தனி மனித அமைதி, குடும்ப அமைதி, சமூக அமைதி, உலக அமைதி ஏற்படுத்துவதன் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நாடு நலம் பெறவும், உலக அமைதி வேண்டியும் வேதாத்திரி மகரிஷியின் தன ஆகர்ஷ்ண சங்கல்பம் 108 முறை உச்சரிக்கப்பட்டு வேள்வி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !