உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி கோத்தகிரி கோயில்களில் சிறப்பு பூஜை

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி கோத்தகிரி கோயில்களில் சிறப்பு பூஜை

கோத்தகிரி: கோத்தகிரியில் உள்ள கோயில்களில் ஆங்கில புத்தாண்டையொட்டி, நேற்று சிறப்பு பூஜை நடந்தது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

கோத்தகிரி கடைவீதி அருள்மிகு மாரியம்மன் கோவில், பண்ணாரி அம்மன் கோயில், சக்திமலை முருகன் கோயில் மற்றும் டானிங்டன் விநாயகர் கோவிகளில், நேற்று அதிகாலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சமூக வெளியில் வரிசையில் நின்று, சாமி தரிசனம் செய்தனர். நேரம் கடக்கவே, பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், தலா, 20 பேர் வீதம் கோயிலுக்குள் அனுமதிக்கப் பட்டனர். இதேபோல, கோத்தகிரி பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தில், நள்ளிரவு மற்றும் அதிகாரிகள் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில், கிறிஸ்தவ மக்கள் திரளாக பங்கேற்றனர். தவிர, கோத்தகிரி சுற்றுவட்டார கிராமப்புற கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. ஏராளமான மக்கள் காணிக்கை செலுத்தி, சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !