உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொல்லிமலையில் மூர்கம்பட்ராயர் விழா

கொல்லிமலையில் மூர்கம்பட்ராயர் விழா

குன்னுார்: குன்னுார் கேத்தி அருகே உள்ள கொல்லிமலை கிராமத்தில் கோத்தர் இன மக்களின் மூர்கம்பட்டராயர் விழா கொண்டாடப்பட்டது.

நீலகிரியில், குரும்பர், இருளர், தோடர், கோத்தர் உட்பட பழங்குடியின மக்கள் தற்போதும் பாரம்பரியம் மாறாமால் தங்களது விழாக்களை கொண்டாடுகின்றனர். இயற்கை மற்றும் மூதாதையர்களை கடவுளாக பழங்குடியினர் வழிபடுகின்றனர். கோத்தரின மக்களின் அய்யனோர், அம்மனோர் எனும மூர்கம்பட்ராயர் திருவிழா கொல்லிமலை கிராமத்தில் நடந்தது. 8 நாட்கள் விரதம் இருந்த மக்கள் பொங்கல் வைத்து, ஆடல் பாடல்களுடன் எளிமையாக கொண்டாடினர். விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும், தானியங்கள் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !