சந்தனக்கூடு விழா
ADDED :1742 days ago
கமுதி : கீழராமநதி கிராமத்தில் ஜிந்தா மதார் வலியுல்லாஹ் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா நடந்தது. பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை செய்யப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சந்தனக்கூடு முக்கிய வீதிகளில் ஊர்வலமாக தர்ஹாவுக்கு வந்தது. இளைஞர்கள் பாரம்பரிய முறைப்படி ஒன்றுக்கூடி பாட்டுப்பாடி, களிகம்பு ஆட்டம் விளையாடி ஊர்வலமாக வந்தனர். விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மலர் வைத்து வழிபட்டனர். கிராம மக்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.