முள்படுக்கையில் தவம் செய்த பெண் சாமியார்: பக்தர்களுக்கு ஆசி
ADDED :1742 days ago
திருப்புவனம்: பெண் சாமியார் முள் படுக்கையில் நின்று பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி, 18ல் முள்படுக்கை தவம் நடைபெறும். நேற்று பெண் சாமியார் நாகராணி அம்மையார் முத்துமாரியம்மன், விநாயகரை வழிபட்டு சிறப்பு பூஜை செய்தார். பின் புண்ணிய தீர்த்தம் தெளித்து, நான்கு அடி உயர முள்படுக்கையில் சாமி ஆடினார். முள்படுக்கையில் படுத்தபடி ஒரு மணிநேரம் தவம் செய்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.