ஆண்கள் மட்டுமே பங்கேற்ற அசைவ உணவு திருவிழா
ADDED :1742 days ago
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா சொரிக்காம்பட்டியில் கரும்பாறை முத்தையா சுவாமி கோயில் உள்ளது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நோயின்றி வாழவும் நேர்த்திக்கடனாக செலுத்திய ஆடுகளை பலியிட்டு நடத்தப்படும் அசைவ விருந்து மார்கழியில் நடக்கும். ஆடுகளை ஆண்களே சமைத்து சாப்பிடுவது வழக்கம்.நேற்று முன்தினம் இரவு 55 ஆடுகளை பலியிட்டு 2 ஆயிரம் கிலோ அரிசியில் உணவு தயாரித்து சுவாமிக்கு படையலிட்ட பின் விருந்து அளிக்கப்பட்டது. மிஞ்சியவற்றை குழியில் கொட்டி புதைத்தனர்.