அருணாசலேஸ்வரர் கோவிலில் தரிசன டிக்கெட் விலை குறைப்பு
ADDED :1742 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தரிசன டிக்கெட் விலை, 20 ரூபாயாக குறைக்கப்பட்டது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், பக்தர்கள் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்கனவே, 20, 50 ரூபாய் கட்டணம் வசூலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மாதம், 20 ரூபாய் கட்டணத்தை ரத்து செய்து, 50 ரூபாய் கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. இதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து, கட்டணத்தை குறைக்க வேண்டும் என, வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று முதல், மீண்டும், 50 ரூபாய் கட்டண டிக்கெட், 20 ரூபாயாக குறைக்கப்பட்டு, பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.