ஐயப்பன் சிலை பிரதிஷ்டை
ADDED :1743 days ago
ஊட்டி: மஞ்சகம்பை கோயிலில் சேதமான ஐயப்பன் சிலையை விரைந்து பிரதிஷ்டை செய்ய வேண்டும் என, இந்து அமைப்பு வலியுறுத்தியுள்ளது,
இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் மஞ்சுநாத் அறிக்கை; மஞ்சூர் அருகே உள்ள, மஞ்சகம்பை கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள சுவாமி ஐயப்பன் சிலை மாடு தள்ளியதில் சிலை சேதமடைந்தது. 2 வருடங்கள் ஆகியும் சீரமைக்க வில்லை. அந்த சன்னதியில் ஐயப்பன் சிலை இல்லாததால் பக்தர்கள் வழிபாடு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஐயப்பன் சிலையை பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபாடு நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.