திருக்கோஷ்டியூர் வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு
ADDED :1743 days ago
சிவகங்கை: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நடைபெறும் அத்யயன உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இக்கோயிலில் அத்யயன உற்சவம் 21 நாட்கள் நடைபெற்றது. பகல் பத்து உற்சவம் டிச.15ல் துவங்கியது. டிச.25ல் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் தொடங்கியது. நிறைவு நாளான நேற்று அத்யாயன உற்சவத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவாமி சொர்க்கவாசல் எழுந்தருளி, ஏகாதசி மண்டபத்தில் சுவாமி பத்தி உலாத்துதல் நடைபெற்றது. தொடா்ந்து மாலையில் நம்மாழ்வார் திருவடி தொழுதல் நிகழ்வும், அதனைத் தொடா்ந்து தேவஸ்தான மண்டகப்படியையொட்டி மாலை, பரிவட்டம் மரியாதைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து கோஷ்டி பிரபந்தம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.