உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி சிவனடியார்கள் நடை பயணம்

உலக நன்மை வேண்டி சிவனடியார்கள் நடை பயணம்

 நடுவீரப்பட்டு : உலக நன்மை வேண்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலிலிருந்து, புதுப்பேட்டை கோட்லாம்பாக்கம் சித்தவடமடம் சிதம்பரேஸ்வரர் கோவில் வரை 10 ம் ஆண்டாக சிவனடியார்கள் நடைபயணம் சென்றனர்.

சிவனடியார்கள் பன்னிரு திருமுறைகளை பாடியவாறு ஊர்வலமாக சென்றனர். காலை 6:00 மணிக்கு திருவதிகையிலிருந்து துவங்கிய நடைபயணம் காந்தி ரோடு வழியாக புதுப்பேட்டை சென்றது. அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது.நிகழ்ச்சியில் ஆன்மிக அன்பர்கள், திருவதிகை திலகவதியார் திருத்தொண்டர்கள், திருவாசகம் முற்றோதல் குழு, இந்து சமுதாய ஆன்மிக கட்டளை, திருநாவுக்கரசர் உழவாரத்திருதொண்டர்கள், பிரதோஷ வழிபாட்டு அன்பர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !