உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி விழா

பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கட ஹர சதுர்த்தி விழா

திண்டிவனம் : தீவனூர் பொய்யாமொழி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது.

திண்டிவனம் அடுத்த தீவனூரில் பிரசித்தி பெற்ற சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.காலை 5:00 மணிக்கு விநாயகருக்கு, மகா அபிேஷகமும், மாலை 4:00 மணிக்கு மகா கணபதி ஹோமும் நடந்தது.மாலை 6:00 மணிக்கு, 108 சங்காபிேஷகமும், இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைஅறங்காவலர் சகுந்தாலாம்மாள், மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !