பழுதடைந்த சிவன் கோவில் புதுப்பிக்க மக்கள் எதிர்பார்ப்பு!
ADDED :4882 days ago
ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியம் ஒன்றியம் பகண்டை கூட்ரோடு அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் சிவன் கோவில் பழுதடைந்த நிலையில் உள்ளது. பகண்டைகூட்ரோடு அடுத்த சீர்ப்பனந்தல் கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த பாலசுந்தரேஸ்வரர் சிவன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் கோவில் பராமரிக்கப்படாமல் மிகவும் மோசமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமாக கிராமத்தை சுற்றி 35 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயில் கோவிலை பராமரிக்கலாம். ஆனால் அறநிலையத்துறை ஆர்வம் காட்டாததால் மிகவும் மோசமான நிலைக்கு மாறி வருகிறது. எனவே பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு கோவிலை சீரமைக்க அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.