அகத்தியர் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :1748 days ago
கீழக்கரை : கீழக்கரை அருகே அகத்தியர் கோயிலில் கும்பாபிேஷக விழா நடந்தது.பழைய விக்ரகத்தை எடுத்துவிட்டு, அதே இடத்தில் புதிய அகத்தியர் சிலை நிறுவப்பட்டது. காலையில் கோமாதா, லட்சுமி பூஜை, பூர்ணாகுதி, சிறப்பு தீபாராதனைநடந்தது. கீழக்கரை சித்திவிநாயகர் கோயிலில் இருந்து 108 புனித நீர்கலசத்தை பெண்கள் சுமந்தபடி கோயிலுக்கு வந்தனர். கடம் புறப்பாடு முடிந்தவுடன் திருப்புல்லாணி ஸ்ரீகாந்த் குருக்கள் விமானக்கலசத்தில் புனிதநீரால் கும்பாபிஷேகம் செய்தார். மூலவர் அகத்திய முனிவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. குழுத்தலைவர் ஸ்ரீராம் சுவாமி,தர்ம ரக்ஷண ஸமிதியின் ராமேஸ்வரம் மண்டலம், ராமநாதபுரம் மாவட்ட, கீழக்கரை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஆன்மிக சொற்பொழி, பஜனை, தியானம், கூட்டுவழிபாடு அன்னதானம் நடந்தது.