உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மசாஸ்தா கோவிலில் ஐயப்பனுக்கு ஆராட்டு

தர்மசாஸ்தா கோவிலில் ஐயப்பனுக்கு ஆராட்டு

அந்தியூர்: அந்தியூரை அடுத்த மேவாணியில் உள்ள, தர்மசாஸ்தா கோவிலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க, ஐயப்பனின் திருவுருவ சிலையை, பக்தர்கள் சுமந்து கொண்டு, கீழ்வாணியில் உள்ள பவானி ஆற்றுக்கு நேற்று வந்து, ஆராட்டு விழா நடத்தினர். அதை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் மற்றும் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். மேவாணி, கீழ்வாணி, ஆப்பக்கூடல் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !