தவழ் கிருஷ்ணர் அலங்காரத்தில் காரமடை ரங்கநாதர் அருள்பாலிப்பு
ADDED :1751 days ago
கோவை: காரமடையில் மிகவும் பிரசித்தி பெற்ற அரங்கநாதர் கோவில் உள்ளது. இங்கு வைகுண்ட ஏகாதசி, சொர்க்கவாசல் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெறும். இவ்விழாவில் மார்கழி பகல்பத்து, ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து உற்சவம், அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. விழாவில் இராப்பத்து உற்சவம் ஒன்பதாம் நாளில் தவழ் கிருஷ்ண அலங்காரத்தில் அரங்கநாத சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.