உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாதானூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

வாதானூர் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

புதுச்சேரி : வாதானூர் ஓசூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது. மண்ணாடிப்பட்டு கொம் யூன் வாதானூர் ஓசூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று (31ம் தேதி) காலை 7.30 மணியிலிருந்து 9 மணிக்குள் நடக்க உள்ளது. கும்பாபிஷேக விழா, கடந்த 28ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மறுநாள் யாக சாலை பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை மூன்றாம் கால யாகபூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று (31ம் தேதி) காலை 5 மணிக்கு நான்காம் கால யாக பூஜை நடக்கிறது. தொடர்ந்து தீபாராதனை, கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !